‘காமன் மேன்’ கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!
rrklakshmnanஇந்தியாவின் மூத்த கார்டூனிஸ்ட்டான ஆர்.கே.லக்ஷ்மண் உடல் நலக்குறை வால் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, வாதநோயால் உடலின் இடதுபக்க உறுப்புகள் செயலிழந்தன. கடந்த 17ம் தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை 7 மணி அளவில் அவர் மருத்துவமனையிலேயே காலமானார். பல்வேறு இதழ்களிலும், பத்திரிகைகளிலும் பணியாற்றி உள்ளார். தனது சிறப்பான கார்ட்டூன் படைப்புகளால் பத்ம விபூஷண், மகசேசே உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றவர்.

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu