அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம் நினைவஞ்சலி
akashஅமரர் ஆகாஸ் திருலோகசிங்கம் நினைவஞ்சலி

பிரான்ஸ் Drancy ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணீரில் வாடும் நிலை தந்து எந்தன்
கண்மணியே நீயும் பிரிந்து சென்றதேனோ
எண்ணிலா வேதனையில் வாடுகின்றேன் ஐயா!

எந்தனுயிர் ஆகாஷ் எங்கு நீ சென்றாய்
அன்புக்கு ஒரு ஆண்மகன் என்றிருந்தேன்
தென்பாக இருந்தேன் நீயிருக்கிறாய் என்றே
என்பொடிந்தே வாடுகின்றேன் என்னிய குழந்தாய்
என்றினி உந்தன் இன்முகங் காண்பேனையா!

எனக்கினி இங்கு என்னதான் இன்பம்- உன்னை
அணைத்த கரங்கள் சோருதே ஆகாஷ்
மனக்கவலைகள் வாட்டுதே ஐயா- என்
மடியினில் நீ தவழ்ந்ததை மறக்கவும் முடியுமா?

ஆகாரம் ஊட்டி அழகு பார்த்த அன்னையிங்கு
அன்பு மகன் ஆகாஷ் துன்பமுடன் வாடுகின்றேன்
பேராவல் கொண்டு உனையழைத்த நாவின்று
பேசமுடியாது வார்த்தை இன்றித் தவிக்குதடா

ஆசையுடன் உன்னை அணைத்த கரங்களின்று
ஆதரவு தனையிழந்து தவிப்பதை நீ அறியாயோ
அம்மா அம்மா என்று நீ அழைக்கும் வார்த்தையினை
இம்மாநிலத்தில் இனியான் கேட்கமுடியதா?

எப்போதும் எம்மை அக்கா அக்கா என்றழைக்கும்
எம் இனிய தம்பியே ஆகாஷ் எங்கு சென்றாய்
தப்பேது செய்தோம் தம்பியை இழப்பதற்கு
தரணியில் உன்னை இனியாம் காண்பதெப்போ

அப்பாவும், அம்மாவும் யாமும் உனையிழந்து
ஆற்றொணா துயரடைந்து வாடுவதை அறியாயோ!
எப்போது இனியுன் இன்முகங் காண்போம்
இனியவனே ஆகாஷ் இனியேது செய்வோம்!

அன்னாரின் துயரச் செய்தி கேட்டு எமக்கு உதவி புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், நேரிலும், தொலைபேசி மூலமாகவும், முகநூல் மூலமாகவும் ஆறுதல் அளித்து துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்தியேட்டிக்கிரியை 29-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறும், இந்நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் சபிண்டீகரக்கிரியையிலும் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7th, Rue Fouquet,
93700 Drancy,
France.

தகவல்
திருலோகசிங்கம்(லெப்பை)
தொடர்புகளுக்கு
திருலோகசிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33141500242
செல்லிடப்பேசி: +33660985237

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu