அமரர் கலாநிதி மறினி றாஜன் ஜோசவ் நினைவஞ்சலி
kalanithimaraniஅமரர் கலாநிதி மறினி றாஜன் ஜோசவ் நினைவஞ்சலி

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலாநிதி மறினி றாஜன் ஜோசவ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி கமலநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மேரி ஜோசவ், லூட்ஸ் ஜோசவ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றாஜன் ஜோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மினி, நிர்மலா, கெங்காதரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

ஆண்டவரே உம் அடியார் மறினி றாஜன்ஜோசவ் அவர்களின்
ஆன்மாவை இவ்வுலகிலிருந்து
அமைதியும் நித்திய ஒளியும் நிறைந்த பேரின்பத்தை
அவர்களுக்கு அளிக்க
பாவம் அனைத்திலிருந்து
அதை விடுவித்துக்கொள்ளும்

மேலும் உம்முடைய புனிதர்
தேர்ந்து கொள்ளப் பெற்றோர் கூட்டத்தில்
அவர் உயிர்த்தெழும் மகிமைபெறுமாறு
செய்தருளுவீராக

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
உம்மை வேண்டுகின்றோம்.
ஆமென்.

அன்னாரின் 2ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை 20-09-2014 சனிக்கிழமை அன்று பி.ப 06:30 மணியளவில் Our Lady of Lourdes, Lee தேவாலயத்திலும், St. Saviors Lewisham தேவாலயத்திலும் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu