வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்
kunnakudiபிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.

கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே என்று இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. வயலின் என்றாலே குன்னக்குடி என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்ற இவரது மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பு.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu