திருமதி இரத்திணாபரணம் குமாரவேலு மரண அறிவித்தல்
ratnaparanamபெயர் :திருமதி இரத்திணாபரணம் குமாரவேலு மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கோப்பாய் தெற்கு
வாழ்ந்த இடம்: மட்டுவில் வடக்கு
பிரசுரித்த திகதி: 2014-09-01

கோப்பாய் தெற்கைப் பிறப் பிடமாகவும், மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்திணாபரணம் குமாரவேலு 30.08.2014 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற அப்புத்துரை இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும் காலஞ்சென்ற அருணாசலம் குமாரவேலு (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் புஸ்பவதி, காலஞ்சென்ற இரஞ்சினி மற்றும் பிரபாகரன் (சுவிஸ்), அருணாகரன் (பொறியியலாளர் ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தெய்வேந்திரன் (ஓய்வுநிலை தபாலதிபர், சமாதான நீதிவான்), மாதவன் (ஓய்வுநிலை சாவ.ப.நோ.கூ.சங்க கிளைகள் மேற்பார்வையாளர்), இராசலட்சுமி (சுவிஸ்), பிரதீபா (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் கோப்பாயைச் சேர்ந்த கமலபூபதி சோமசுந்தரம், பத்மாவதி நடராசா (குஞ்சு), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும், தணிகைவேந்தன் (பிரான்ஸ்), செந்தூர்குமரன் (தாதிய உத்தியோகத்தர்அரசினர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), கிரிஸ்ணாஐங்கரன் (பிரான்ஸ்), திருவேரகன் (இந்தியா), நர்மதா, சர்மிளாசிறிதரன், யோகரஞ்சன் (பிரான்ஸ்), மைதிலி பரமேஸ்வரன் (லண்டன்), தாட்சாயினி, துவாரகா, ஆதன், ஆருதி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், தர்மிலன், ரம்யா, கார்த்திகன், வைஷ்ணவன், சுசாங்கி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பொ.தெய்வேந்திரன்

தொடர்புகளுக்கு
பொ.தெய்வேந்திரன் – , 077 926 0503, 021 205 7836

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu