திருமதி இராசம்மா செல்லப்பா – மரண அறிவித்தல்




rasamma-srilankaதிருமதி இராசம்மா செல்லப்பா – மரண அறிவித்தல்

(பரமேஸ்வரி ரீச்சர், இளைப்பாறிய ஆசிரியை -வரணி மகா வித்தியாலயம்)
மலர்வு : 29 மார்ச் 1933 — உதிர்வு : 29 ஓகஸ்ட் 2014

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா செல்லப்பா அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்லப்பா(இளைப்பாறிய ஆசிரியர், சிறீபாரதி வித்தியாலயம்- மந்துவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தா(ஆசிரியை- கொ/ பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி), வனஜா(நியூசிலாந்து), வசீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வேலாயுதபிள்ளை(ஒய்வுபெற்ற அதிபர்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மராஜா(விரிவுரையாளர், உயர் தொழில்நுட்பக் கல்லூரி- மட்டக்குளி), சுதாகரன்(நியூசிலாந்து), சிவசுதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரியங்கா, மற்றும் கனுஷ்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2104 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணிமுதல் 8:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
13A, 3/2 Fussels Lane,
Colombo- 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— இலங்கை
தொலைபேசி: +94112559943
செல்லிடப்பேசி: +94775487076

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu