திருமதி யோகம் செல்லத்துரை – மரண அறிவித்தல்
பிறப்பு : 6 மே 1950 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2014
யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி நெல்லியடி முடக்காடு வீதி, அரியாலை புங்கன்குளம் வில்வம் தெரு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகம் செல்லத்துரை அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று அரியாலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், ஆழ்வார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை(ஓய்வுபெற்ற முகாமையாளர் மக்கள் வங்கி-நெல்லியடி) அவர்களின் அன்பு மனைவியும்,
இளம்பிறைநாதன்(ஊழியர்- யாழ்.மாநகர சபை), சத்யபாமா(லண்டன்), பிரணவநாதன்(ஆணையாளர்- மாநகர சபை யாழ்ப்பாணம்), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தசாமி(சட்டத்தரணி), பார்வதி(கனடா), காலஞ்சென்றவர்களான அம்மா, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமகள், கிருஷ்ணராசா(லண்டன்), சிந்துஜா(ஆசிரியை-பாசையூர் மகளிர் வித்தியாலயம்), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கந்தசாமி, சிவஞானம், ராசம்மா, காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலோத்தமா, சங்கனி, ஆசினி ஹரீஸ், துளசி, அவ்வை, கல்கி, துஷா, அகிர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல- 12,
வில்வம் தெரு,
புங்கன்குளம்,
அரியாலை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326311210
கிருஷ்ணராசா — பிரித்தானியா
தொலைபேசி: +441375767796
பிரணவநாதன் — இலங்கை
தொலைபேசி: +94212211184
இளம்பிறைநாதன் — இலங்கை
தொலைபேசி: +94213735722