திரு. சதாசிவம் பாலசிங்கம் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
balasingam-franceதிரு. சதாசிவம் பாலசிங்கம் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழீழ மண்னில் வரவு : 05-09-1951
அன்னிய மண்னில் உதிர்வு : 28-08-2010

தமிழீழம் – கிளிநொச்சி / பூநகரி, தம்பிராயைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் – யாழ்ப்பாணம் / நல்லூரை வாழ்விடமாகவும், பிரான்ஸ், லிமோஸ் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சதாசிவம் பாலசிங்கம் அவர்களின் ஆறாத எம் நினைவலைகளின் நான்காம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

“அப்பா ஆண்டுகள் நான்கு ஓடிவிட்டாலும் ஆற்ற முடியாத துயரில் நாங்கள் இருக்கின்றோம் – தமிழ்த் தாயிடம் ஆறுதல் தேடி அலைகின்றோம் – தாய் நாடு விட்டு அன்னிய நாடுவந்து பின்பு ஒன்று சேர்ந்திருந்து நலமுடன் நாம் வாழ்ந்து வந்தோம் இடை நடுவினில் பறி போனது நம் வாழ்க்கை அப்பா”…!

“அப்பா நாதியற்று நின்ற வேளை நல்லவர் கெட்டவர் புரிந்துகொண்டோம் – அப்பா நீங்கள் இல்லாதபோதுதான் புரிகின்றது நிஜமான இதயம் எப்படி என்று – அப்பா உங்கள் பிள்ளைகள் நால்வருக்கும் நீங்களும், அம்மாவும் சூரியனுமாக நாம் சந்திரனுமாக இருந்தோமே – சூரியன் மறைந்துவிட்டால் சந்திரனுக்கு இருள்தான் வாழ்க்கை”…!

“அப்பா நாங்கள் ஒரு இலட்சியத்தோடு வாழ்கின்றோம் ஆகவேதான் நாங்கள் இன்றும் நாங்களாகவே இருக்கின்றோம் அதனால்தான் நல்லவர்கள் மத்தியில் நன்மதிப்புடன் இருக்கின்றோம்”…!

“அப்பா எங்களை உண்மையாக புரிந்தவர்களுக்கு எங்கள் செயலுக்கான விளக்கம் தேவையில்லை – ஏற்றிய தீபம் அணைந்துவிட்டதால் ஏழு ஜென்மத்திலும் அனுபவிக்கும் துன்பத்தினை ஏழு கடல் தாண்டி வந்து அனுபவிக்கின்றோம் – ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோருடனும் பழகினோமே ஏன் என்று கேட்கக்கூட யாரும் இல்லாமல் ஏக்கத்துடன்
எட்டாத படிகளைக் கடந்து ஏணிப்படிகளாக படிப்படியாக நாங்கள் இலட்சியத்தோடு வாழ்கின்றோம் ஆகவேதான் நாங்கள் இன்றும் நாங்களாகவே இருக்கின்றோம்”…!!!

* “அப்பா எம் தலை காக்கும் தலைவன் இல்லாவிட்டால் தலை நிமிர்ந்து நிற்கவிடாது இவ் உலகம் – இருந்தும் தரணியில் தன்நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம் அப்பா”…!!!

“அப்பா மனம் விட்டு பேசுவதற்கு நல்ல மனிதர்கள் இல்லை – மண்ணில் பிறப்பவர்கள் அனைவரும் மரணிக்கும் காலம் வரும் அப்போது மனிதர்களுக்கும் புரியும் எங்கள் மன வேதனை – மனிதர்கள் குறையுடையவர்கள் மட்டும் அல்ல மனிதர்கள் குறை காண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்”…!!!

“அப்பா வாடிய பூக்களை காணும் போது வாடிய உங்கள் பிள்ளைகள் எம் முகமே எமது கண் முன் தோன்றும் – வெளியில் எம் வேதனைகளைச் சொல்லமாட்டோம் – வெளிப்படையாக நாங்கள் நால்வரும் கதைக்கும் போது நம் மன வேதனைகளைச் சொல்வொம் அப்பா – அப்போது எம் தமிழ்த் தாயை அருள் வேண்டி வேதனையைத் தீர்க்கின்றோம் அப்பா”…!

“எமது கண்ணுக்கு கண்ணாக எம் இரு கண் விழிகளான அப்பாவே, அம்மாவே காற்றாக நீங்கள் இருந்து கடவுள் உருவில் காட்சிகள் தருகின்றீர்கள் – கவலைகளை போக்குகின்றீர்கள் – மூச்சு நின்றால் தான் மரணம் இல்லை – நம்பிக்கையினாலும் தினம் தினம் மரணம் தான்”…!

“மூலையில் இருக்கவேண்டியவர்கள் என்று முதுகுக்கு பின்னால் கதைத்தவர்களும், கதைப்பவர்களும் உண்டு – முன்னுக்கு வந்து தொட்டு வாழ்த்திவிடுங்கள் என்று கூறியவர்களும், கூறுபவர்களும் உண்டு”…!

* “எங்கள் அப்பாவே, அம்மாவே உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எமக்குக் கிடைக்கும்”…!!!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து நான்கு ஆண்டு ஆனாலும் ஆறாது அப்பா உங்கள் பிரிவுத்துயர்”…!

“அப்பா நிலையில்லா இவ்வுலகில் நிலைத்திருக்கும் உங்கள் உறவால் நினைவிழக்க மாட்டாமல் நாம் நீந்துகின்றோம் கண்ணீரில்”…!

“மரமிருக்கும் நாள்வரையில் நிழலிருக்கும் பூமியிது நாமிருக்கும் நாள்வரையில் நீங்கள் இருப்பீர் அப்பா எம் மனத்திரையில்”…!

“அப்பா நொடிப் பொழுதில் எமை நோக விட்டு சென்று விட்டீர் ஆண்டுகள் நீளலாம் – ஆனால் உன் நினைவுகள் நீங்காது”…!

“தூங்காத வாழ்க்கை போன்று அப்பா துரத்துகிறது உன் நினைவுகள் – நீங்கள் பெற்ற எமக்கு பெருமை சேர்த்த எம் வற்றா நதியே உமைத் தந்தையாய் பெற்றதால் நாம் பெருமை அடைந்தோம்”…!

“அப்பா நீ எமக்குக் கற்றுத்தந்து விட்டுக் கனதூரம் சென்று பல வாரம் ஆனாலும் அகலாது உன் நினைவுகள்”…!

“அன்பின் பிறப்பிடமே – எமை அரவணைத்த எம் அப்பாவே – தந்தையே உம் அன்பை இழந்து ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் வருவாய் என தேடுகின்றோம்”…!

அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தமிழ்த் தாயை இதயபூர்வமாக தினம் தினம் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

அப்பா உந்தன் இழப்பை ஈடுசெய்ய முடியாமல் உன் பிரிவால் வாடும் உங்கள் பிள்ளைகள், மருமகன், மருமகள்கள், பேரப்பிள்ளைகள்.

[லிமோஸ், பிரான்ஸ்]

தகவல்

மகன்: பா . உ . பாலா

தொடர்புகளுக்கு பிரான்ஸ் : தொலைபேசி : (0033) 624662245

இடம் :

Mr. & Mrs. BALASINGAM
40 RUE DU MARECHAL JUIN
87100 LIMOGES
FRANCE

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu