திருமதி அன்னம்மா செல்லத்துரை – மரண அறிவித்தல்
annama-srilankaதிருமதி அன்னம்மா செல்லத்துரை – மரண அறிவித்தல்

இறப்பு: 2014-08-27

பிறந்த இடம்: புத்தூர்
வாழ்ந்த இடம்: சுழிபுரம்

புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் திசைமழையை வசிப்பிட மாகவும் தற்போது புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னம்மா செல்லத்துரை நேற்று (27.08.2014) புதன்கிழமை காலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர் களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ் சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், இராசமணி, செல்வமணி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் (ஓய்வுபெற்ற படவரைஞர் நிலஅளவை பகுதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும், ஈணூ. சண்முகதாசன் (வைத்திய கலாநிதி, லண்டன்), விமலதாசன், நிர்மலா (கொழும்பு), உமாசங்கர் (பொறியியலாளர் லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும், ஈணூ.தனலட்சுமி (வைத்திய கலாநிதி லண்டன்), வசந்தாதேவி, மயில்வாகனம் (ஓய்வுநிலை பட வரைஞர், மகாவலி அபிவிருத்திச் சபை), சுமதி (பொறியியலாளர் லண்டன்), ரஞ்சித்குமார், சதீஸ்குமார், சோபனா, தர்சனா ஆகியோரின் மாமியும், சினேஷ், லிலோஜன், கார்த்திகா, ஷஜீபன், மயூரன், அர்ச்சுன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.08.2014) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் தகனக்கிரியைக் காக அந்திரானை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – புத்தூர் கிழக்கு, புத்தூர், 021 320 2223

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu