தம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல்




thampaija-shanmugalingamபெயர் :தம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :இணுவில் மேற்கு
வாழ்ந்த இடம்: இணுவில் மேற்கு
பிரசுரித்த திகதி: 2014-06-27

இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சண்முகலிங்கம் (இளைப்பாறிய உப அதிபர், இணுவில் மத்திய கல்லூரி) 26.06.2014 சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா – செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் , காலஞ்சென்ற சீனிவாசகம்-தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் சுகிர்தாம்பிகையின் அன்புக் கணவரும் , பிரபாகரன் (U.K) பிரதீபன் (நோர்வே) ,காலஞ்சென்ற ஜெயதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் மோனிக்கா,ஜெனனி ஆகியோரின் மாமனாரும் ,நிக்கோலஸ் , தஷானி , தஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ,காலஞ்சென்ற நடராஜா (இளைப்பாறிய ஆசிரியர்) நாகராசா (இளைப்பாறிய ஆசிரியர்,கனடா) சிவபுஸ்பம் (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கமலாதேவி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – இணுவில் மேற்கு, இணுவில். ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu