அலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல்
alosious-vinsatபெயர் :அலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சுன்னாகம்
வாழ்ந்த இடம்: சுன்னாகம்
பிரசுரித்த திகதி: 2014-06-28

சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனோராஜ் அன்ரனி நேற்று முன்தினம் (26.06.2014) வியாழக்கிழமை அகால மரணமடைந்தார்.

அன்னார் அலோசியஸ் வின்சன்ற் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப பொறியியலாளர், நீர்ப்பாசனத் திணைக்களம், மூதூர்) பற்றிசியா ரட்ணராணி தம்பதியரின் அன்பு மகனும், டன்ஸ்ரன் ஜோன் அன்ரனி, ஜக்சன் ஜோன் அன்ரனி (தரம் 7 சென் ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், அருட்பணி றொபின்சன் யோசப், அருட்சகோதரி விமலினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க இரங்கல் ஆராதனை இன்று (28.06.2014) சனிக்கிழமை மு.ப.10.30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, புனித அந்தோனியார் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம். , 077 225 3079

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu