திரு மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் மரண அறிவித்தல்




mariyampillaiதிரு மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் மரண அறிவித்தல்

ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் அவர்கள் 25-06-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை(சமத்தர் பொன்னையா) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரின்பநாயகம்(அப்பச்சி), கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

யூலின் பெர்ணான்டோ(லண்டன்), அமலநிறோஜன்(U.S Hotel – யாழ்ப்பாணம்), கிறிஸ்ரி நிசாந்தன்(புனித பத்திரிசியார் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சமத்தா் குணரட்ணம்(வைத்தியர்), மேரி(லண்டன்), காலஞ்சென்ற கிறேசியன், நேசரத்தினம், நவமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்மிளா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மேரி தவமணி, மேரி நவமணி(கனடா), புஸ்பவதி, அருமைநாயகம், சாந்தகுமாரி(கனடா), சத்தியகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும்,

யோகராணி(லண்டன்), காலஞ்சென்ற லோரன்ஸ் மரியதாஸ், குணரட்ணம்(கனடா), விஜயகுமார், அல்பேட்(கனடா), வித்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-06-2014 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித திருமுழுக்கு அருளப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 368/1,
பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லலிதா — இலங்கை
தொலைபேசி: +94213206399
நிசாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766370260
அமலநிரோஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776686544

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu