‘ஹார்லிக்ஸ் மாமா’ நடிகர் முரளி மரணம்
ac_muralimohanஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. இவரது இயற்பெயர் பாலமுரளி மோகன்.

இன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும், இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

அள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் கலக்கியிருப்பார்கள்.

‘ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..’ என்று விவேக் வசனம் பேசுவது இதில்தான்.

முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு.

என்ன காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu