தாமோதரம்பிள்ளை இராசேஸ்வரன் மரண அறிவித்தல்
thamotharampillai-rajeshvaranபெயர் :தாமோதரம்பிள்ளை இராசேஸ்வரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கரணவாய்
வாழ்ந்த இடம்: சுழிபுரம்
பிரசுரித்த திகதி: 2014-06-12

கரணவாய் வடக்கு, மாவிலைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை இராசேஸ்வரன் இளைப்பாறிய விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர், முன்னாள் இயக்குநர், சிறுவர் கல்விக்கும் பால்நிலை அபிவிருத்திக்குமான நிறுவனம் ((INS-GD)) 10.06.2014 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் பொன்மலரின் (இயக்குநர் சிறுவர் கல்விக்கும் பால்நிலை அபிவிருத்திக்குமான நிறுவனம் (INS-GD சங்கமம், தர்மகர்த்தாவும் முகாமையாளரும் மூளாய் வதிரன் புலோ ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோயில்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை நாகரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசுவாமிப்பிள்ளை தம்பையா சிவபாக்கியவள்ளி நாச்சன் தம்பதியரின் அருமை மருமகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் இரத்தினாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும், இராசேஸ்வரி, சறோஜினிதேவி, சிவப்பிரகாசம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் இராமச்சந்திரன் (பொறியியலாளர்), விக்னராசா (இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதி), விக்னராணி, மகாராணி, அழகராசா (பட்டயக்கணக்காளர்கனடா), பவளமலர் ஆகியோரினதும் மைத்துனரும், யசோதா, லலிதா, நல்லமாப்பாணர், பகீரதன் ஆகியோரின் சிறிய தந்தையும், சியாமளா, உதயசங்கர், சுமந்திரன், நிரஞ்சனன், அனுஷா, கவிதா, கிருஸ்ணா ஆகியோரின் பெரிய தந்தையும், கோமதி, ஹரன், நிலானி,கலானி, சங்கீதா, சவீந்திரா, சஞ்சேந்திரா,அர்ச்சனா, அனந்தன் ஆகியோரின் ஆசை மாமனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.06.2014) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மூளாயிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பித்தனை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.(

தகவல் : இ.பொன்மலர் (மனைவி) மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
இ.பொன்மலர் (மனைவி) மற்றும் குடும்பத்தினர். – மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையடி, யாழ்.காரைநகர் பிரதான வீதி, மூளாய், சுழிபுரம் ,

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu