திருமதி திரவியம் பொன்ராசா மரண அறிவித்தல்
thiraviyam-porasaபெயர் :திருமதி திரவியம் பொன்ராசா மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: சாவகச்சேரி
பிரசுரித்த திகதி: 2014-05-01

பெருங்குளம், பிள்ளையார் வீதி கல்வயல், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி திரவியம் பொன்ராசா நேற்று (30.04.2014) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் யோகம்மா தம்பதியரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத் தம்பிசின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்ராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை (நீர்வேலி), இரத்தினசிங்கம் (நெடுங்கேணி) பாலசிங்கம் (நீர்வேலி) மற்றும் துரைசிங்கம் (வவுனியா), காலஞ்சென்றவர்களான குருசிங்கம் (கனடா), செல்லத்துரை (ஜெயபுரம்) மற்றும் காராளசிங்கம் (நெடுங்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சண்முகலிங்கம் (சரசாலை), அன்னலட்சுமி (அன்னக்கிளி) லலிதாதேவி (லலி) ஆகியோரின் பாசமிகு தாயும், சுகிர்தராணியின் அன்பு மாமியும், யஸ்வினியின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.05.2014) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணி யளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப் பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பெருங்குளம் பிள்ளையார் கோயில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. ,

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu