திரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
ganagasabaiதிரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். போயிட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வடக்கு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், பன்னாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சுப்பிரமணியம் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை தெய்வானைப்பிள்ளை(போயிட்டி) தம்பதிகளின் அருமை மகனும், கந்தையா செல்லம்மா(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம்(பவாக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன்(முன்னாள் சீமெந்து தொழிற்சாலை ஊழியர்- காங்கேசன்துறை), சயந்தன்(ஆசிரியர்- யாழ்/அருனோதய கல்லூரி, முன்னாள் பிரதி அதிபர் யாழ்/ மகாஜனக் கல்லூரி, விரிவுரையாளர்- மெய்யியல், அளவையியல் யாழ்/ புதிய உயர்க்கல்லூரி), ஜெயரஞ்சன்(ஜெயா- பிரான்ஸ்), ஜெயந்தன்(ஆசிரியர்- யாழ்/ கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசக்தி(ஆசிரிய ஆலோசகர் 2ம் மொழி சிங்களம்- வலிகாமம் கல்வி வலயம்), சூரியகலா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராம், அபிசயனி, அபிசரண், திவ்யா, சௌமியா, ஜீவேஸ், கிருண்யா, ஆரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2014 புதன்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் பன்னாலையிலுள்ள அவரது மகன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவபதி,
பன்னாலை,
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212059701
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779758224

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu