திருமதி சுப்ரமணியம் மீனாட்சி மரண அறிவித்தல்
meenakshiதிருமதி சுப்ரமணியம் மீனாட்சி மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் மீனாட்சி அவர்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், கணபதிப்பிள்ளை, மற்றும் வள்ளியம்மா வைத்தியலிங்கம்(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரத்தினம்(மணித்தம்பி), ஞானேஸ்வரி(பேபி), செல்வரத்தினம்(இக்குட்டி), கனகரத்தினம், காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லட்சுமி, பாலசிங்கம், அமிர்தாம்பிகை, பத்மராணி, நாகநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கலாஜினி, அருணா, கோபிகிருஷ்ணா, சிவானந்தன், கிருபானந்தன், லதா, சுகிர்தா(றமா), கஜன், நிவேதினி, மதுறங்கன், டிமாலினி, வாகினி, கஜான், தர்ஷனா, டனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மிதுசா, ஹரிஸ், கிருஷ்ணா, துளசியன், டிதுஷன், நிரோஜன், அகிம்சன், அபிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல 155,
பாண்டியன்குளம்.
வவுனிக்குளம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777065002
பாலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779026514
நாவரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770579607
கோபி — கனடா
செல்லிடப்பேசி: +14163476099
கனகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774542657

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu