ஜோசப் நெவின்ஸ் குணராஜா மரண அறிவித்தல்




josef-nevinsபெயர் :ஜோசப் நெவின்ஸ் குணராஜா மரண அறிவித்தல்
(முன்னாள் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச்சங்க ஊழியர்)
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி: 2014-04-24

யாழ்ப்பாணம் 3ஆம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் நெவின்ஸ் குணராஜா (21.04.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லஸ் நெவின்ஸ் மேரி தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான அரியநாயகம் மேரிஅக்னஸ் தம்பதியரின் மருமகனும் றஜியின் அன்புக்கணவரும் செல்வராஜா (UK), செல்வராணி (Canada) காலஞ்சென்ற தர்மராஜா மற்றும் சிறானி (Canada) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் நிறோஷன் (UK), நிறஞ்சன் ((Dubai), நியோமி (Canada) ஆகியோரின் அன்புத்தந்தையும் மரியா(UK), கமிலஸ்(Canada) ஆகியோரின் அன்புமாமனாரும் லிசோன், றொசான் ஆகியோரின் அன்புப்பேரனும் காலஞ்சென்ற இராஜேஸ்வரன் மற்றும் ரவி, றாதிக்கா, ராஜன், ரஞ்சித், சூரியகலா, அன்ரனற், ஜெயா, விஜய் ஆகியோரின் மைத்துனரும் சாளினியின் மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் நாளை (25.04.2014) வெள்ளிக்கிழமை மு.ப. 10 மணிக்கு அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு யாழ். கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் – 56, 3 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 9214059, 416 9024939

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu