பெயர் :தம்பாப்பிள்ளை உதயகுமார் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: புங்குடுதீவு
பிரசுரித்த திகதி: 2014-04-04
புங்குடுதீவு, 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை உதயகுமார் (ஊழியர் (சாரதி), பிரதேசசபை, வேலணை) (02.04.2014) புதன்கிழமை அகாலமரணமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை மற்றும் யோகம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் இரத்தினமணி தம்பதியரின் மருமகனும் மகாதேவியின் அன்புக் கணவரும் கேமலதா, சஞ்ஜீவன் (ஊழியர் பிரதேசசபை உப அலுவலகம், புங்குடுதீவு), மரூஷா (பொலிஸ் உத்தியோகத்தர்), கனார்த்தனி, சுகனியா, சிரஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கருணானந்தன் (ஈசன்), டர்மலன் ஆகியோரின் மாமனும், காலஞ்சென்ற வசந்த குமாரின் சகோதரரும், காலஞ்சென்ற வாமதேவன் மற்றும் சிவதேவன், சாந்ததேவன், இரத்தினதேவி, காலஞ்சென்ற சிறிதேவன் ஆகியோரின் மைத்துனரும், யதீஷா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.04.2014) வெள்ளிக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக் காக முற்பகல் 10 மணியளவில் புங்குடுதீவு முனையிற்புலம் இந்து மயானத் திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : புங்குடுதீவு 01,
தொடர்புகளுக்கு
புங்குடுதீவு 01, – மனைவி,பிள்ளைகள். , 077 532 6779