யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி காளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ராஜரட்ணம் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், தவமணி குழந்தைவேலு அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கி
விட்டுச் சென்ற உத்தமரே
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்
நிழலில் இசைந்தாடி நினைவில்
இழைந்தோடி நெஞ்சில் உயிர் வாழும் உறவே
மண் கடல் வான் உளவும் மறவோமே உன் பிரிவால் ஒவ்வொரு கணமும்
துடியாய் துடிக்கும் எம் இதயங்களில்
உன் நினைவுகள் எந்நாளும் வளர்பிறையே,
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனிடம் வேண்டுகிறோம்.
“அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் – பெறாமகன்Mobile : +94761725531 பிரசாந் – பெறாமகன்Mobile : +94776510277 பாபு – மருமகன்Mobile : +447908774440