திருமதி கந்தசாமி சரஸ்வதி – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி சரஸ்வதி

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் மேற்கு பூநகரி வாடியடியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மனோகரன்(ரஞ்சன்), மனோகரி(கீதா) மற்றும் மாதவி(சுதா- பாரதி வித்தியாலயம்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற குமாரசுவாமி, லட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லநாதன்(பிரதேசசபை பூநகரி), கதிசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நதுர்ஷா(பேராதனைப் பல்கலைக்கழகம்), டவிகா(கிளிநொச்சி மத்திய வித்தியாலயம் ) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,விதுரன்(சுவிஸ்), பிரகிந்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஜெயந்தி நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல 180, உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94766117779

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu