திரு கனகரத்தினம் பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்
திரு கனகரத்தினம் பாலகிருஷ்ணன்

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவற்காடு மன்னாரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முருகையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நடராசா சுசிகலா தம்பதிகளின் அன்பு சம்மந்தியும்,நேசமலர்(சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர், மாவட்டச்செயலகம், மன்னார்) அவர்களின் பாசமிகு கணவரும்,பாநிதி(பொறியியலாளர்- சிங்கப்பூர்), திசாந்(புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி- மன்னார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பார்த்தீபன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசௌந்தரி(ஓய்வுபெற்ற ஆசிரியை, யா/இராமநாதன் கல்லூரி), பாலறஞ்சினி, காலஞ்சென்ற கமலாதேவி(ஆசிரியை, யா/நாவற்குழி மகா வித்தியாலயம்), விமலாதேவி(ஆசிரியை, யா/வீமன்காமம் மகா வித்தியாலயம்), சோதிமலர்(ஆசிரியை, யா/இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஈஸ்வரன்(ஓய்வுபெற்ற சாரதி உத்தியோகத்தர் வடக்கு மாகாணம்), வரதராசா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், இராஜேந்திரம், நவநீதகிருஷ்ணன்(ஆசிரியர், யா/மத்திய கல்லூரி), சிவநேசன்(சுவிஸ்), தவநேசன்(பிரான்ஸ்), நேசராணி (நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,ரவிக்குமார்(நோர்வே), அனுசா(சுவிஸ்), உமாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

மகிழ்யா, பரிமளன், நதீஸ்வரன்(பிரித்தானியா), டினாந்தி, விகிர்தன், பானுஜா, பானுஜன், யகிர்தன், துவிசாந், சஞ்சயன், சங்கீதை, ஜனுஜன், கிருசன், சுலக்ஷன், கோபிலக்ஷன், நிவேதிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கரிசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் சோமராந்தோட்டம், உடுவில் கிழக்கு, சுன்னாகம் எனும் முகவரியில் உள்ள மைத்துனர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி கொட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நேசமலர் – மனைவிMobile : +94778911104
திசாந் – மகன்Mobile : +94760025696

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu