திரு ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற் – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற்
(முன்னாள் பிரதம லிகிதர் கடற்தொழில் கூட்டுத்தாபனம் சமாதான நீதவான் (JP), அரச மொழி பெயர்ப்பாளர் நிர்வாகி- Linus Secretarial Services Colombo-11)
பிறப்பு 23 SEP 1937 இறப்பு 27 JUL 2022

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற் அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நிக்கிலஸ் ஐயாத்துரை, ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஜோசப் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிறிஸ்ரின் புஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

பற்றிஷியா(கனடா), பத்மினி(சுவிஸ்), மஞ்சுளா, ஹிலேரியன்(ஆசீர்- ஹொலண்ட்), முகுந்தன்(லண்டன்), ஷோபனா(ஆசிரியை- நல்லாயன் கன்னியர் மடம், கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன்(கனடா), சகாயராஜா ரவி(சுவிஸ்), ஜெயந்தி(லண்டன்), ஜீலியன்(சட்டத்தரணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரிபூரணம், வில்லியம் மற்றும் பிலிப்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஜஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஹானா, றொஷான், ஷிரோன், ஷெஹானி, ஷெஹாறா, டெமிற்றியா, கேஷ்வின், றேஷ்வின் ஆகியோரின் அருமைத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் மு.ப 08:30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பினனர் பி.ப 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்லப்பட்டு, 30-07-2022 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மல்லாகம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பற்றிஷியா – மகள்Mobile : +16475306626
பத்மினி – மகள்Mobile : +41798713595
ஆசிர் – மகன்Mobile : +31621604168
முகுந்தன் – மகன்Mobile : +447578389932
ஷோபனா – மகள்Mobile : +94776167878

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu