திரு ஆறுமுகம் பரமேஸ்வரன் (ஈசன்) – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் பரமேஸ்வரன் (ஈசன்)
பிறப்பு 08 NOV 1945 இறப்பு 15 APR 2022

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமேஸ்வரன் அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிரத்தினம் நாகம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ப.சித்திராதேவி(சித்திரா- கரைச்சி பிரதேசசபை, ஓய்வுபெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனனி(அவுஸ்திரேலியா), க.ஆரணி(சித்த ஆயுர்வேத வைத்திய நிலையம்- திருவையாறு, கிளிநொச்சி), ப.கஜன்(கனடா), து.நிலானி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேஸ்வரன், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி(மட்டுவில்), நகுலேஸ்வரி(மட்டுவில்), விக்னேஸ்வரன்(மட்டுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிசோர்குமார்(அவுஸ்திரேலியா), கணேசராஜன்(கிளிநொச்சி, கிழக்கு நீர்ப்பாசன திணைக்களம்), ஹம்ஸாயினி(கனடா), துசியந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லிபிசன், டிலக்சன், ஸ்ரீஷா(அவுஸ்திரேலியா), துசிதன்(கல்கி பாமசி பொதுச்சந்தை கிளிநொச்சி), அமிர்தனா, அவினயா, பரதன், சஸ்வின், டியா(கனடா), ஹரிஸ், ஹாசினி, ஆஹாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
இல 223, சில்வா வீதி,
வட்டக்கச்சி.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சித்ரா – மனைவிMobile : +94773551140
ஜனனி – மகள்Mobile : +61421284183
ஆரணி – மகள்Mobile : +94778375839
கஜன் – மகன்Mobile : +16479628101

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu