திருமதி தனலக்‌ஷ்மி குலசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி தனலக்‌ஷ்மி குலசிங்கம்
பிறப்பு 16 MAY 1937 இறப்பு 29 JAN 2022

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனலக்‌ஷ்மி குலசிங்கம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவயோகம் தம்பதிகளின் ஆசைப் புதல்வியும், சிற்றம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்ததி, கோசலை, இந்திரன், காலஞ்சென்றவர்களான தமயந்தி, மஞ்சுளா, நகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவயோகன், ராகுலன், மல்லிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலக்‌ஷ்மி, பாலகுமார், சிவலக்‌ஷ்மி, ராஜலக்‌ஷ்மி, ராஜ்குமார் மற்றும் அன்னலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அர்ஜூன் – மதரணி, தீபிகா – மனோகரன், ஆர்திகா – மயூரன், கவீனா, அனிதா, அபிஷேக், ஷயனுதா, காலஞ்சென்ற விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷயா, அஷ்மிதா, அர்வின், ஆதிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 39 K.K.S வீதி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருந்ததி – மகள்

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu