திரு நாகநாதர் கந்தசாமி
(முன்னாள் வர்த்தகர்- ஜெயராம்ஸ், ஜெயகெளரி புடவை மாளிகை)
பிறப்பு 30 JAN 1930 இறப்பு 01 DEC 2021
யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் கந்தசாமி அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற வேதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயதேவி, ஜெயகெளரி, ஜெயராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னபூரணி, வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற பேரம்பலம், செல்வபூரணி, சரவணமுத்து, ஆனந்தராசா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசேகரம், குலராஜா, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரவிந்தன், பிரதிபா, ஜெயப்பிரகாஷ், பிரசாந், பிரியந்தினி, சுதாகர், நர்மிதா, மயூரன், உமேஷ், ரம்யா, செளம்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
திவ்யன், மதுரன் ஆகியோரின் அருமைப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் தெல்லிப்பழை கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ஜெயராம் (மகன்)
தொடர்புகளுக்கு
ஜெயராம் – மகன்Mobile : +4915210328246