திரு இராமுப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்
திரு இராமுப்பிள்ளை நடராசா
மண்ணில் 30 DEC 1956 விண்ணில் 22 NOV 2021

யாழ். காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் நெல்லியான் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை நடராசா அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை(முருகேசு) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலன், கோபிகா, தீபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிறஞ்சன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,

இந்திராவதி, பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, இராஜபூபதி(மலர்), மகேஸ்வரி, உதயலக்சுமி(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரன், சுகிதா, சேதுகாவலன், கனகலிங்கம், திருஞானசம்பந்தன், சந்திரராசா, கதிர்காமநாதன், முருகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நதுனன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
நெல்லியான் வீதி,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம். தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
கோகுலன் – மகன்Mobile : +94777030604
நிறஞ்சன் – மருமகன்Mobile : +447990030185

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu