திருமதி சகுந்தலா கனகரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி சகுந்தலா கனகரட்ணம்
(ஓய்வுபெற்ற குடிவரவு- குடியகல்வுத் திணைக்களம் இலங்கை, மற்றும் இலங்கை கல்வி அமைச்சு உத்தியோகத்தர்)
தோற்றம் 13 MAY 1939 மறைவு 24 OCT 2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா கனகரட்ணம் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம்(ஓய்வுபெற்ற இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரி உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அரவிந்தன்(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கல்யாணி(கனடா), சித்ராஞ்சனி(அவுஸ்திரேலியா), மைத்ரேயி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகராசா, சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி, பாஸ்கரன், பத்மினி, பிரபாகரன், மோகனா ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

அபிராமி, ஆதி, மெலனி, கனிகா, அனுஷ்கா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: அரவிந்தன்(மகன்)

தொடர்புகளுக்கு
கனகரட்ணம் – கணவர்Mobile : +16472920678
அரவிந்தன் – மகன்Mobile : +14162687184
முகுந்தன் – மகன்Mobile : +61414219922
துஷ்யந்தன் – மகன்Mobile : +61401343525

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu