திருமதி அன்னபாக்கியம் அமிர்தலிங்கம் (குஞ்சு) – மரண அறிவித்தல்
திருமதி அன்னபாக்கியம் அமிர்தலிங்கம் (குஞ்சு)
பிறப்பு 03 MAR 1957 இறப்பு 24 AUG 2021

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Elsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் அமிர்தலிங்கம் அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

அமிர்தலிங்கம்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

தாரணி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராசம், ஜெயா, ராசா, ஆனந்தி, அன்னலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி…. சாந்தி…. சாந்தி….
நித்திய இளைப்பாற்றல் பெற்றுவிட்டீர்கள்“இணுவில் மண்ணில் வரமாக வந்துத்த
அரும்செல்வமே அன்னபாக்கியம்”
மனிதருள் மாணிக்கமாய் இன்புற்று வாழ்ந்து
எம் குலசாமி ஆகிவிட்டீர்கண்களில் நீர் வழிய எமை விட்டு எங்கேயம்மா நீ.
கண்ணும் கருத்துமாக எமைகாத்து
அல்லும் பகலும் உனை உருக்கி
தியாகத்தின் சுடராகி வாழ்ந்த
எம் இதய தெய்வமே…இனி எம் நாளில்
எப்படி தேடியலைந்தாலும் உன் இனிய
முகம் அதனை காண முடியுமா….வாழ்க்கை என்னும் சோலைதனில்
உம் உறவாய் வந்துதிர்த்த
உம் கணவர் அமிர்தலிங்கம்
நீர் ஆற்றிய இல்லற
சோலையிலே தோன்றிய
இரு மலர்கள் தாரணி, செந்தூரன்
அவையின்று உம் பிரிவால் வாடி நிற்க
காலன் உன்னை கொண்டு போனானோ
மெளமான கனவு உன்னை காவி
சென்றதுவோ……இரவும் பகலும் அழுது புரண்டாலும்
உன் குரல் எப்போதும் கேட்டிருமா…
உன் உறக்கம் கலைத்திடவே
எம் உள்ளம் ஏங்குதம்மா….
நீர் எம்மை நீங்கினாலும்
உம் அன்பு அரவணைப்பும் எப்போதும் எம்முடனேஓம் சாந்தி…. சாந்தி…. சாந்தி….தகவல்: கணவர்- அமிர்தலிங்கம்(ஜேர்மனி)
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 01 Sep 2021 2:30 PM
Home Kirchstraße 120, 50126 Bergheim, Germany

தொடர்புகளுக்கு
அமிர்தலிங்கம் – கணவர்Mobile : +4922748296429

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu