மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்




msudayamurthyசென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய ‘நம்மால் முடியும் தம்பி நம்பு’ என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu