ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்தவர் காலமானார்!




micheal-ak47மாஸ்கோ: ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் இன்று ரஷ்யாவில் காலமானார்.

ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்தவர் ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்த மிகைல் கலாஷ்னிகோவ். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள மிகைல், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார்.

எனது கண்டுபிடிப்பான ஏ.கே.47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டு, ரஷ்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 94 வயது மிகைல் கலாஷ்னிகோவ், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu