திரு கிறிஸ்டி ராஜ்குமார் – மரண அறிவித்தல்
திரு கிறிஸ்டி ராஜ்குமார்
பிறப்பு 26 OCT 1969 இறப்பு 21 FEB 2021

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டி ராஜ்குமார் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிறிஸ்டி, A.J.L. ராஜமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

அனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

எமிலி, ஜோஸி, மரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற எமில் ஜோய் பிரேம்குமார், சுமாஜினி துரைராஜா, காலஞ்சென்ற சுரேஸ்குமார், விஜயதர்ஷினி இளம்பருதி, டியானி செல்வரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனா, ப்ரீத்தா, கபிக்‌ஷன், நிதர்ஷன், ஜனனி, வினுஷன், நெல்சன், நந்தன், வனோ, ஜினோ, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே
காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும் போதாதய்யா
என்றும் உன் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்….தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இளம்பரிதி – மைத்துனர்Mobile : +94775027179
குமார்Mobile : +33668656161
சீலன்Mobile : +447481747337
சுபாஷ்Mobile : +447525158231
பாஸ்கரன் – நண்பர்Mobile : +447956590692

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu