தமிழ் திரையுலகத்தில் வில்லன் நடிகராக கோலோச்சிய எம்.என் நம்பியார் அவர்கள் தனது 89 வயதில் காலமாகியுள்ளார்.
சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள நம்பியார் அவர்கள் தோன்றிய முதல் படம் ‘பக்த ராமதாஸ்’.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக நாடகங்களில் நடித்து கொண்டிருந்த அவர், வில்லனாக நடிப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை வசப்படுத்தினார்.