ஒலிபரப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
rajeswari_shanmugamஇலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளராகிய திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் வெள்ளியன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இனிமையான குரல் வளத்தை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த இவர், வானொலி நாடகங்களிலும் தனது குரல் வளத்தைப் பயன்படுத்தி சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

இலங்கை மற்றும் தமிழக வானொலி நேயர்கள் மத்தியில் வானொலி குயில் என இவர் புகழ்பெற்றிருந்தார். இளம் வானொலி அறிவிப்பாளர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நிகரில்லாத ஆசானாகவும் விளங்கினார்.

செய்தி வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார். இவரது இழப்பு இலங்கையின் வானொலி துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu