பிரபல திரைப்பட நடிகை சுஜாதா இன்று காலமானர். அவருக்கு வயது 59.
கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சுஜாதாவின் உயிர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரிந்தது.
இலங்கையில் 1952-ம் ஆண்டு பிறந்த சுஜாதாவின் தாய்மொழி மலையாளம். கே.பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினி காந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
வாழ்ந்து காட்டுகிறேன், விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்டவை சுஜாதா நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.
ஆரம்ப காலக்கட்டத்தில் கதாநாயாகியாக வலம் வந்தவர், பின்னர் உறுதுணை கதாப்பாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர்.
சுஜாதாவுக்கு சாஜீத் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இறுதிச் சடங்கு சென்னை – கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இன்று நடக்கிறது.