வல்லிபுரம் பாக்கியம் – மரண அறிவித்தல்
Vallipunam pleasure
பெயர் : வல்லிபுரம் பாக்கியம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-11
வாழ்ந்த இடம் : நீர்வேலி
பிரசுரித்த திகதி : 2013-01-12

நீர்வேலி வடக்கு காமாட்சி அம்பாள் ஐக்கிய கைத்தொழில் சங்கத்தடியைச் சேர்ந்த வல்லிபுரம் பாக்கியம் நேற்று (11.01.2013) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வரும் மேற்படி சங்க முகாமையாளர் கனகசபை வல்லிபுரத்தின் அன்பு மனைவியும், கனகசபேசன், சசிதேவி (ஆசிரியை நீர்வேலி சீ.சீ.த.க.பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயும், அன்பழகன், சிறீவதனி ஆகியோரின் அன்பு மாமியும், தெய்வீகன் (மொறட்டுவ பல்கலைக் கழகம்), அபிராமி (யாழ். தொழிநுட்பக் கல்லூரி), ஆர்த்தீபன் (யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி), உதயமாலினி, திபாகர் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, இராசையா, பூரனம், இராசம்மா ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், குமாரசுவாமி, செல்வநாயகம், நடராசா, சின்னராசா J.P ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (12.01.2013) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப.2மணியளவில் நீர்வேலி சிவியக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – கனகபவனம், நீர்வேலிவடக்கு, நீர்வேலி.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu