பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்
karthikesuதமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 79.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இதயம் செயலிழந்தன் காரணமாக கொழும்புவில் உள்ள இல்லத்தில் இரவு 8.20 அளவில் மரணம் அடைந்தார்.

ஓய்வு பெற்ற பேராசிரியரான கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் மொழிக்காக குறிப்பிடத்தக்க வகையில் தொண்டாற்றிவர்களில் இவரும் ஒருவர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் 1932-ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பிறந்தார். கதாம் படித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தவர்.
கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் கல்விப் பயின்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்தின் உள்ள பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், 1978-ம் ஆண்டு தொடங்கி சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் அழைப்பின் பேரில் பேராசிரியாக செயல்பட்டவர்.

சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், ஒக்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க பேக்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹாவட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளையும் விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கைத் தமிழ் தொடர்பாக ஏறத்தாழ 70-க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.

மார்க்ஸிச சிந்தனை கொண்ட இவர், யாழ்ப்பாண சமூதாயத்தின் பல்வேறு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தவர்.
1963-ம் அண்டு ரூபவதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu