திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி
பிறப்பு 03 JUL 1944 இறப்பு 18 OCT 2020

யாழ். தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரசானந்தராஜா நாகேஸ்வரி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(புகையிரத நிலைய அதிபர், சமாதான நீதவான்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரசானந்தராஜா(உப தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

DR.சிவானந்தன்(முன்னாள் விரிவுரையாளர் மருத்துவபீடம்- யாழ். பல்கலைக்கழகம், சிரேஷ்ட மருத்துவ விஞ்ஞானி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்- அவுஸ்திரேலியா), சிவலோஜினி(ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம்- வலிகாமம்), சிவகரன்(உப தபாலதிபர்- தொல்புரம்), சிவறஞ்ஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், மாகாண விவசாயத்திணைக்களம்- வடமாகணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலினி(MSC-அவுஸ்திரேலியா), சிவகுமார்(ஆசிரியர்- யாழ். விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்), லோகராணி, கபிலன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தங்கேஸ்வரி(ஆசிரியை- யாழ். இணுவில் மத்தியகல்லூரி), கிருஷ்ணராஜா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- நீர்பாசனத்திணைக்களம்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, இரத்தினராஜா(ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி), சண்முகராஜா(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சானிக்கா, அஸ்விகா(அவுஸ்திரேலியா), சிவஹஜன், பவஹஜன்(யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +94212250726
சிவகரன் – மகன்Phone : +94217902098
DR.சிவானந்தன் – மகன்Mobile : +61424244948

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu