திரு சண்முகரட்ணம் பிறேம்குமார் – மரண அறிவித்தல்
திரு சண்முகரட்ணம் பிறேம்குமார்
(ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர்- இலங்கை வங்கி வடமாகாணம், பொருளாளர்- கிருபாகர சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் கொக்குவில்)
தோற்றம் 16 MAR 1955 மறைவு 31 AUG 2020

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் பிறேம்குமார் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகரட்ணம், ஜெகஜோதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், செல்வராசா செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

ராதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, கிருபாகரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறேமானந், பிறிஸ்ஸில்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிறேம சுதன்(சுவிஸ்), பிறேம மோகன்(சுவிஸ்), பிறேம ஜெகன்(சுவிஸ்), பிறேம தர்சினி(கனடா), பிறேம லோஸினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தி, சாந்தி, பவானி, கமலநாதன், ஈசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கணேசமூர்த்தி(சுவிஸ்), கணேசராஜா(ஐக்கிய அமெரிக்கா), கண்ணதாசன்(சுவிஸ்), கருணாகரன்(பிரித்தானியா), கருணதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

இந்திராணி, ஜெயலக்‌ஷ்மி, மதுராகினி, கேணம், பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனிஸ்க்கா, பிறித்திக்கா, ஜெய் மதுஷன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:30 அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்முகவரி: Get Directionஇல.02, கல்லூரி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94726183141
ராதாமணி – மனைவிMobile : +94726183141
மயூரன் – மகன்Mobile : +33766570074

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu