திருமதி திலகவதி மயில்வாகனம் – மரண அறிவித்தல்
திருமதி திலகவதி மயில்வாகனம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- றோயல் ஆரம்ப பாடசாலை, கொழும்பு, இணை ஆரம்பகர்த்தா- கோம்புஷ் தமிழ் கல்வி நிலையம், இந்து சமயக் கல்விக்கு வித்திட்டவர்- சிட்னி, தமிழ் நூலகத்தின் ஸ்தாபக உறுப்பினர்- சிட்னி)
தோற்றம் 24 JUN 1926 மறைவு 27 JUL 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி மயில்வாகனம் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் அம்பலவாணர் நாகேஸ்வரி அம்பலவாணர் தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மயில்வாகனம்(அவுஸ்திரேலியா, வர்த்த அத்தியட்சகர் கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

சித்தரஞ்சன், தேவராஜன், ஜானகி, அருள், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌசளா, பாலினி, இராமசந்திரன், Rocco ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவாநந்தன் (Institute of Race Relations- London), சிவஞானம், ரகுநாதன்(Colombo Dockyard), புனிதா பேரின்பராஜா(Educator, Harrow UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Jenny Bourne, சுசிலா ரகுநாதன், காலஞ்சென்ற பாக்கியம் பேரின்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி, சங்கரி, பிரணவன், ஆரணி, ஹரன், நர்மதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று சிட்னி Rookwoodமாயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும். அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இணையம் வழியாக பார்வையிடுவதற்கான இணையத் தொடர்புகள் அறியத்தரப்படும். இவ் வருட இறுதியில் குடும்பத்தினரும், நண்பர்களும் பங்கு கொள்ளும் வகையில் நினைவஞ்சலி ஓழுங்கு செய்யப்பட உள்ளது என்பதை அறியத் தருகின்றோம். தகவல்: குடும்பத்தினர்

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu