திருமதி தனுசியா ஜெயமோகன் – மரண அறிவித்தல்




திருமதி தனுசியா ஜெயமோகன்
(Labour Officer, Department of Labour, Jaffna)
தோற்றம் 15 AUG 1980 மறைவு 27 JUL 2020

யாழ். கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா ஜெயமோகன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவபாதசுந்தரம்(Retd. surveyor superintendent)- தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயமோகன்(Draftsman- Oman) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,

அனுசியா(Teacher- Methodist girls’ high school Point Pedro), சுஜீவன்(Quantity Surveyor- Dubai) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுஜீவன்(Department of Commerce), சோமா(Dubai), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிர்ஷானி, சதுர்வரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

லிஷாந், ஷேஷாந் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயமோகன் – கணவர்Mobile : +918870520662
சுஜீவன் – சகோதரர்Mobile : +971558925365
சுஜீவன் – மைத்துனர்Mobile : +94776251768

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu