செல்வி யோகநாயகி சண்முகநாதன் – மரண அறிவித்தல்
yokanayaki Shunmuganathan
பெயர் : செல்வி யோகநாயகி சண்முகநாதன்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-08
பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : பெரியவிளான்
பிரசுரித்த திகதி : 2013-02-02

இளவாலை வடக்கு, இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஐந்தாம் கட்டையடி, பெரியவிளானை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி யோகநாயகி சண்முகநாதன் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தெல்லிப்பழை)நேற்று (08.01.2013) செவ்வாய்க் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் சண்முகநாதன்(ஓய்வு பெற்ற விவாகப்பதிவாளர்) காலஞ்சென்ற தையல்நாயகி தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், நிர்மலநாதன் (சுவிஸ்), கமலநாதன், சிவநாதன்(வலி. வடக்குப் பிரதேச சபை), நிர்மலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திரகுமாரதேவி(சுவிஸ்), யோகராணி (ஆசிரியை மயிலிட்டி வடக்கு, கலைமகள் மகாவித்தியாலயம்),கமலராணி (விவாக, பிறப்பு, இறப்புப் பதிவாளர் வலி.வடக்கு), சக்திஆனந்தன் (கொக்குவில், நொதோன் இன்டஸ்ரீஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நேத்தன் (சுவிஸ்), நெவின்(சுவிஸ்), நிரோஷன், நிருஷா, மேஷினி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(09.01.2013), புதன்கிழமை மு.ப.11.00மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முள்ளானை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : தந்தை, சகோதரர்கள்

தொடர்புகளுக்கு
தந்தை, சகோதரர்கள் – ஐந்தாம்கட்டையடி, பெரியவிளான், இளவாலை. , 0213211853, 0779773495

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu