திரு முரளீதரன் சதாசிவம் (முரளி) – மரண அறிவித்தல்
திரு முரளீதரன் சதாசிவம் (முரளி)
மலர்வு 13 JUN 1959 உதிர்வு 30 MAR 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும், லண்டன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முரளீதரன் சதாசிவம் அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மலிஷா, நிவிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவி, சவிதா, காலஞ்சென்ற ஹரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, ஹென்றி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தக்சன், அபி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

டரண், நயனி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மூத்த தமையனாய் எல்லோருக்கும் முன்பிறந்த அண்ணா!
மலர்ந்த முகத்தோடு அணைத்திட்ட சொந்தமெல்லாம்
அழுது புலம்பிட நீர் சென்ற இடம்தான் எங்கே?
ஏதும் இயம்பாமல் எங்கு சென்றீர் எம்மைத் தவிக்கவிட்டு
கண்ணான உன் கண்மணிகள் கலங்கி தவிக்கையிலே
காணாமல் நீர்சென்ற காரணம் தான் என்ன?
பாசத்தின் உறைவிடமே இறைவனின் பாதங்களில்
நீர் வேதனையின்றி அமைதிபெற வேண்டுகிறோம்
மறைந்த குடும்பத் தலைவனுக்கு
இந்த கண்ணீர் அஞ்சலி சமர்பணம்.. அன்புடன் அம்மா, சகோதரன், சகோதரி, பிள்ளைகள்… நாடு பூராகவும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் COVID-19 காரணமாக திரு. முரளதீரன் சதாசிவம் அவர்களின் இறுதிச்சடங்கு குடும்பத்தினரோடு மட்டும் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் வருகைக்காக மலர்வளையங்களை அனுப்புவதாக இருந்தால் அவர் நினைவாக பின்வரும் அமைப்புகளுக்கு உங்கள் அன்பளிப்பை Toronto Western General Hospital மூளைப்பிரச்சார அமைப்புக்கும், South Asian Autism Awareness Center (SAAC) அமைப்புக்கும் நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவி – சகோதரர்Mobile : +4164327345
சவிதா – சகோதரிPhone : +19058830350

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu