திரு இராமலிங்கம் நடராஜா – மரண அறிவித்தல்




திரு இராமலிங்கம் நடராஜா
பிறப்பு 19 AUG 1937 இறப்பு 16 JAN 2020

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை W.A Silva Mawatha பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நடராஜா அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை(நெல்லியடி, கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபோதினி(Ministry of Health), சுகந்தினி(கனடா), நிரஞ்சன்(HSBC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. ஜனகன் நவரட்ணசிங்கம்(WHO), ரமேஷ் விவேகானந்தராஜா(கனடா), பவதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கண்மணி கைலாசப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவராஜா(Retired Director of Customs) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லையா கைலாசப்பிள்ளை(முன்னாள் சாவகச்சேரி நகரசபை தலைவர்), காலஞ்சென்ற பாக்கியம் சுப்பிரமணியம், அருந்ததி, சிவராஜா, Dr. கிருஷ்ணபிள்ளை தவராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தங்கமுத்து தில்லையம்பிள்ளை, செல்வராணி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஷன், கெளதமன், கீர்த்தனா, சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-01-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை A.F. Raymond(Parlour No 1)மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94777364636

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu