செல்வி தில்லைநாயகி இராசரத்தினம் – மரண அறிவித்தல்




செல்வி தில்லைநாயகி இராசரத்தினம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருகோணமலை சென்சேவியர், மானிப்பாய் சென் ஆண்ட்ஸ், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி)
பிறப்பு 06 AUG 1939 இறப்பு 05 NOV 2019

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஹம்டன் லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி இராசரத்தினம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பராசக்தி தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகநாயகி, அருளானந்தன் மற்றும் தையல்நாயகி,(இளைப்பாறிய உபதபால் அதிபர்- பிடாரி கோவிலடி), கருணாநிதி(இளைப்பாறிய தபால் அதிபர்), மகாலட்சுமி(ராதா), தயாநிதி(சந்திரா ஸ்டோர்ஸ் ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற குணானந்தன்(இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆறுமுகம் வரதராஜன்(இளைப்பாறிய மின் மேலதிகாரி), காலஞ்சென்ற சட்டத்தரணி செல்வநாயகம் J.P.U.M. ரதிதேவி, புஸ்பராணி, சிவநாயகி(இளைப்பாறிய மக்கள் வங்கி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருகோணமலையை வதிவிடமாகக் கொண்ட பிரேமாவதி, கமலாவதி, கிருஷ்ணகுமார், நந்தகுமார்(பிரித்தானியா), தயானுஷா இராஜ்குமார்(உபதபால அதிபர் பிடாரி கோவிலடி ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்.

யசோதரா, முரளிதரன், கங்காதரன், இராஜந்திரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்.

துஷ்யந்தி ஹரிகரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜனார்த்தனன்(பிரித்தானியா), யதிசங்கர்(பிரித்தானியா), துவாரகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கஜேந்திரன், தனுஷா விஜயசங்கர்(மக்கள் வங்கி உத்தியோகத்தர்), உதயணன்(அரச முதலீட்டு வங்கி உத்தியோகத்தர்), கார்த்திக்(டாக்டர்), பிரசன்னா(NTB உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பூதவுடல் பொரளை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கருணாநிதிMobile : +94775373359
ராதாPhone : +94112366379Mobile : +94772484176
தயாநிதிPhone : +94212213166

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu