அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் – மரண அறிவித்தல்
அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
(யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்)
பிறப்பு 14 DEC 1945 இறப்பு 11 JUL 2019

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று தனது இவ்வுலகப் பணியை நிறைவுசெய்து இறைவனடி சேர்ந்தார்.

இவர் கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் இயக்குனராகவும், யாழ். மனித முன்னேற்ற நடுநிலையத்தின் இயக்குனராகவும், செட்டிகுளம், பூநகரி, முழங்காவில், முல்லைத்தீவு, மாங்குளம், கொய்யாத்தோட்டம் ஆகிய பங்குத் தளங்களில் பங்குத் தந்தையாகவும், யாழ். மறைமாவட்டக் காணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அன்னார், சாமிநாதன் குருசாமி பத்திநாதன், சேலின் அன்னரத்தினம் பத்திநாதன் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். அருட்தந்தையின் பூதவுடல் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் கொழும்பு பொரளையிலுள்ள றேமன்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும், பி.ப 04.30 மணிக்கு அவ்விடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு யாழ். ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் 13-07-2019 சனிக்கிழமை தொடக்கம் 15-07-2019 திங்கட்கிழமை மதியம் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. அதனைத்தொடர்ந்து பி.ப 03.30 மணிக்கு யாழ். ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் பின்னர் யாழ். புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள், குருக்கள், துறவிகள், பங்குமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Joy Sabanathan Mobile : +94785389338
Margaret Samuel Mobile : +161428816590
asanthan Mobile : +94777705097
Edward Mobile : +94763646933

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu