திரு இராமகிருஷ்ணன் பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்
திரு இராமகிருஷ்ணன் பாலச்சந்திரன்
பிறப்பு 31 JAN 1955 இறப்பு 17 JUN 2019

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கற்குளி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் பாலச்சந்திரன் அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினராசா(ஓய்வுபெற்ற நகரசபை செயலாளர்), நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயநிதி(ஆசிரியை- யா/நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிகா(ஆசிரியை- யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), நிஷாந்தன்(பிரான்ஸ்), தபோதரன்(மாணவன்- ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன்(பிரேதச செயலகம் சாவகச்சேரி), சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகுமாரி, இராசேந்திரன், நேசமலர், தீனதயாளன்(லண்டன்), சிறிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சு.ரஜித், சு.துஷானி, சு.அகரன், நி.அஸ்மிதா, நி.அம்ஸிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று பி.ப 2:00 மணிக்கு நடைபெற்று பின்னர் சாவகச்சேரி, தனங்கிளப்பு, கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தபோதரன் – மகன் Mobile : +94772273283
நிசாந்தன் – மகன் Mobile : +33629405086
தீனன் – சகோதரர் Mobile : +447961659295

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu