திருமதி நகுலேஸ்வரி தியாகராசா – மரண அறிவித்தல்
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி தியாகராசா அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராசா(பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, சிவபாக்கியம், குலநாயகம் மற்றும் தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தியாகேஸ்வரி(இலங்கை), விஜயகுமார்(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), சிவானந்தகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), வசந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மவதி, காலஞ்சென்றவர்களான சிவராசா, நாகராசா மற்றும் புனிதவதி, காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் கமலாதேவி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கைலாயநாதன், சாந்தினி(கனடா), கலைவாணி(இலங்கை), ரூபவதி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சகோதரர், சகோதரி பிள்ளைகளின் பெரியதாயாரும் சிறிய தாயாரும்,மைத்துனர் மற்றும் மைத்துனிமார் பிள்ளைகளின் மாமியாரும்,யதுகுலன், தர்சிகன், லக்சிகன், விதுசா, நிரோசன், கம்சலா, கல்பனா, டிசாயினி, ஜெயசீலன், கேசினி, அபித், அபிசேக், பிரணவன், அபர்னா, எழில்வேந்தன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிசனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-06-2019 சனிக்கிழமை, 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் சிவன் வீதி, யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-06-2019 திங்கட்கிழமை அன்று நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை இல்லத்தில் மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 84, சிவன் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
தியாகேஸ்வரி Phone : +94212220390 Mobile : +94763227880
விஜயகுமார் Mobile : +14379938289
ஜெயக்குமார் Mobile : +94774820912 Mobile : +94774016459
சிவானந்தகுமார் Mobile : +41614822287 Mobile : +41764227922 ம
னோகரன் யோகேஸ்வரி Mobile : +94773212199
மனோகரன் யோகேஸ்வரி Mobile : +41797834041
வசந்தகுமார் Phone : +442038949867 Mobile : +447932647390

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu