திரு எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா (பெரியதம்பி) – மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1946 இறப்பு 12 MAY 2019
யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அவுறாம்பிள்ளை எமிலியாம்பிள்ளை, செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை இம்மனுவேல் திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சாந்தப்பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும், சாந்திக்கா(சுவிஸ்), சாமளா(இத்தாலி), டியூக்சியாம்(இலங்கை), யாழினி(நெதர்லாந்து), டியூக்சிகாந்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும், வசீகரன், அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சின்ஷியா, எமில்சியா, பியர்ஷன், எல்சா, அஷ்லி, ஷர்வின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும், சூசை ஏரோணிமுஸ்(இளைப்பாறிய இராணுவ அதிகாரி), அருளானந்தம், அவுறாம்பிள்ளை, பிலோமினா, மரியதாஸ், டேவிற் அன்ரனி, மேரி பிறக்சி பற்றிமா, றூபினா, எட்வேட் லோகநாதன், அன்னம்மாள், யோன் கிளாடியூஸ், காலஞ்சென்ற லூமினா, டேவிற்யோசப் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிறிஸ்டின் ரட்ணகுமார், அன்ரன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும், றீற்றா, காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிளி – மனைவி Mobile : +94776046643 Phone : +94212263937 அன்ரனி – மருமகன் Mobile : +31654335763 சாமளா – மகள் Mobile : +393512833971