திரு முத்துக்குமார் தங்கராசா (மெக்கானிக் தங்கர்) – மரண அறிவித்தல்




திரு முத்துக்குமார் தங்கராசா (மெக்கானிக் தங்கர்) – மரண அறிவித்தல்
பிறப்பு 08 NOV 1946 இறப்பு 13 APR 2019

யாழ். குப்பிளான் தெற்கு மிந்திரையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், சுவிஸ் Langenthal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் தங்கராசா அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் புதுநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகமலர் அவர்களின் பாசமிகு கணவரும், சசிகலா, சசிகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் சந்திரகலா, காலஞ்சென்ற சர்வகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற இராமமூர்த்தி, இராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னபூரணம், தர்மலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கந்தசாமி, கலைவாணி, தர்மகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், சதுசன், சகீசன், காவியா, சாருகன், சானுஜா, சுகிஷா, வதன்யா, பிரஸ்ணவி, ததுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2019 மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி
தொடர்புகளுக்கு
யோகமலர் தங்கராசா – மனைவி Mobile : +94774013853

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu